காலையிலே கொட்டும் கனமழை..
தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தி 1 - 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
6-8 -ம் வகுப்புகளுக்கு வழக்கம் போல் தேர்வு நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.