சென்னை பல்கலை: மார்ச் 25ல் முதுகலை தேர்வு முடிவுகள்:
சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி
இயக்ககத்தில், முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 25ம் தேதி
வெளியிடப்பட உள்ளன.கடந்த டிசம்பர் மாதத்தில், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., ஆகிய
படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச்
25ல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக
இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை ஏப்ரல் 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண www.ideunom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.