தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு கால அட்டவணை வெளியீடு:
வரும் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி
பட்டயத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம்
வெளியிடப்பட்டுள்ளது. பட்டயப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு தேர்வு ஆகஸ்ட்
4-ஆம் தேதி தொடங்குகிறது.
பட்டயப் படிப்பிற்கான இரண்டாம் ஆண்டுத்
தேர்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி
முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறும். ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும்
இரண்டாமாண்டு தேர்வில் முதல் நாளன்று இந்திய கல்வி முறை, 25-ஆம் தேதி
கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.
26-ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, உருது,
மலையாளம் உள்ளிட்ட மொழிகள் தொடர்பான தாள் மற்றும் இளஞ்சிறார் கல்வித்
தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 27, 28 மற்றும் 29 தேதிகளில் ஆங்கிலம்,
கணிதவியல் மற்றும் அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஜூலை ஒன்றாம் தேதி, சமூக
அறிவியல் தேர்வுடன் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நிறைவடைகின்றன.
முதலாமாண்டுக்கான தேர்வு ஜூலை 4-ஆம் தேதி
கற்கும் குழந்தை என்ற தாளுடன் தொடங்குகிறது. 5-ஆம் தேதி, கற்றலை
எளிதாக்குதலும் மேம்படுத்துதலும் என்ற தாளும், 6-ஆம் தேதி மொழிக்கல்வி,
இளஞ்சிறார் கல்வி என்ற தேர்வுகளும் நடைபெற உள்ளன. 8-ஆம் தேதி ஆங்கில மொழி,
9-ஆம் தேதி கணிதவியல், 10-ஆம் தேதி அறிவியல் கல்வி, 11-ஆம் தேதி சமூக
அறிவியல் கல்வி பாடத்துடன் முதலாமாண்டு தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...