10ம் வகுப்பு: வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் அதிகம்:
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் படி,
வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் தங்களை ஒரு படி
உயரத்திலேயே வைத்துள்ளனர்.
சென்ற 2012ம் ஆண்டில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 83.40% ஆக இருந்தது.
இந்த ஆண்டு அது 86% ஆக அதிகரித்துள்ளது. இருந்தாலும், கடந்த 2012ம் ஆண்டில்
88.9% ஆக இருந்த மாணவியர் தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 92% ஆக
அதிகரித்துள்ளது.
இந்த வருடம் தேர்வு எழுதியவர்களில் 4,57,250 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியரில் 4,77,965 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்ற ஆண்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 86.20% ஆக இருந்தது. இந்த ஆண்டு அது
89% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மாணவியரின் பங்கு
அதிகம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...