ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை திருவள் ளுவர் சிலை அருகே 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்க ளின் கூட்டு நட வடிக்கைக்குழு திருவண்ணா மலை மாவட் டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பதிவுமூப்பு அடிப்படையில்
ஆர்ப்பாட்டத்தில் தொடக் கப்பள்ளி முதல் மேல்நிலை கல்வி வரை தாய்மொழி, தமிழ் வழிக்கல்வியை நடைமுறை படுத்த வேண்டும், புதிய ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்,
6–வது ஊதிய குழுவில் மத் திய அரசு உயர்த்தி வழங்கிஉள்ள அனைத்து படிகளை யும் தமிழக அரசு ஆசிரியர்க ளுக்கும், அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி கண்டன கோஷம் எழுப் பினர்.
ஆர்ப்பாட்டத்தில் திரு வண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்த 20 ஆசிரியர் சங்கங் களை சேர்ந்த ஆசிரிய–ஆசிரி யைகள் கலந்து கொண்ட னர்.
ஊர்வலம்
முன்னதாக 15 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஆசிரி யர்கள் அனைவரும் திண்டி வனம் சாலை ரெயில்வே கேட் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருவள்ளுவர் சிலையை வந்தடைந்தனர்.








